Primary Menu

Top Menu

October 16, 18

ஜீன்ஸ்களில் பாக்கெட் எதற்கு?!

நாம் கார்ப்பரேட்காரர்களின் மாய உலகில் உறங்கிக்கொண்டிருக்கிறோம்.

100 ரூபாய் முதல் லட்சங்கள் வரையிலான விலைகளில் ஹேண்ட்பேக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த ஹேண்ட்பேக் பிசினஸ் சூடுபிடித்ததற்கு `பேன்ட் பாக்கெட்’ ஒருவகையில் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

17-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை, மேற்கத்திய நாடுகளில், பெண்கள் உடைகளில் `பாக்கெட்’ மிகவும் அத்தியாவசிய அங்கமாய் இருந்தது.

இந்தக் காலத்துப் பெண்களின் ஹேண்ட்பேக் சைசில், அவர்களின் பாக்கெட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது பேன்ட்டுகளில் பொருத்தப்படும் `பேட்ச் பாக்கெட்டை (Patch Pocket)’ போல் உடையின் வெளிப்புறத்தில் இருக்காது.

17-ம் நூற்றாண்டில் `சுருக்குபை’ போல் இருக்கும் நீண்ட பையை பெண்கள் தங்களின் உள்ளாடைக்குள் பொருத்திக்கொள்வார்கள். இந்தக் காலத்துப் பெண்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் `ஹேண்ட்பேக்’ பயன்பாட்டுக்கு வந்தபிறகுதான், அந்தப் பழைய பாக்கெட்டுகளின் தேவை மெதுவாகக் குறைந்தது.

அன்று வரை பொருள்களை சுமக்கும் அத்தியாவசிய அங்கமாக இருந்த பாக்கெட், 20-ம் நூற்றாண்டில் அழகுக்காகப் பொருத்தப்படும் வெறும் `பியூட்டி பார்ட்டாக’ மாறியது. அதிலும், பெண்களின் பேன்ட் பாக்கெட்டுகள் எதற்கென்ற கேள்வி எழாமல் இல்லை. சிறியளவு பர்ஸ் வைப்பதே மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், ஆண்களின் பாக்கெட்டுகள் அப்படி அல்ல. பர்ஸ், பணம் முதல் சோப்பு, சீப்பு வரை அத்தனையையும் பாக்கெட்டில் அடைத்துக்கொள்ளலாம்.

ஆண்களைப்போல் அத்தியாவசியப் பொருள்களை பெண்களால் பாக்கெட்டினுள் வைத்துக்கொள்ள முடிவதில்லை. `இதனால் யாருக்கு என்ன லாபம்!’ என்று கேட்டால், அது நிச்சயம் ஹேண்ட்பேக் உற்பத்தியாளர்களுக்குதான். வெறும் மொபைல் வைத்துக்கொள்வதற்கு, `மொபைல் பவுச் (Mobile Pouch)’ முதல் பல்வேறுவிதமான பொருள்களை அடைத்துக்கொள்ளும் `டோட் பேக் (Tote Bag)’ வரை பயன்பாட்டுக்கு ஏற்ற பல விதவிதமான ஹேண்ட்பேக்குகள் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

மொபைல், பர்ஸ் போன்றவை 20 முதல் 40 சதவிகித அளவு மட்டுமே பெண்கள் பேன்ட் பாக்கெட்டினுள் நுழைக்க முடியும். மீதி பிக்பாக்கெட்காரர்களுக்காகக் காத்திருக்கும். அவ்வளவு ஏன், பெண்களின் கைகளே 10 சதவிகிதம் அளவுதான் பாக்கெட்டினுள் போகும். ஆனால், ஆண்கள் பேன்ட் பாக்கெட்டின்னுள் 100 சதவிகிதம் ஸ்பேஸ் இருக்கும். என்ன கொடும சார் இது. மொபைல்கூட வைக்க முடியாம எதுக்கு பாஸ் பாக்கெட்!

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்?

பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon