Primary Menu

Top Menu

July 20, 18

கான்டாக்ட் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப் சாட் செய்யலாம்

வாட்ஸ்அப் சாட் செய்ய அவசியம் குறிப்பிட்ட கான்டாக்ட்-ஐ சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கான்டாக்ட்-ஐ சேமிக்காமல் சாட் செய்யும் வழிமுறையை இந்த தொகுப்பில் பார்ப்போம். மேலும் இதை செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இத்துடன் இந்த வழிமுறை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் வேலை செய்யும்.

– முதலில் உங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசரை திறக்க வேண்டும். – இனி சர்ச் பாரில் https://api.whatsapp.com/send?phone=XXXXXXXXXXX லின்க்-ஐ டைப் செய்ய வேண்டும். (X என்ற இடங்களுக்கு மாற்றாக நீங்கள் சாட் செய்ய வேண்டியவரின் நம்பரை, குறிப்பிட்ட தேசிய குறியீட்டையும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் பதிவிட வேண்டும்) – அந்த வகையில் நீங்கள் சாட் செய்ய வேண்டியது இந்திய எண் என்றால் +91 என துவங்க வேண்டும், அதாவது உங்களது லின்க் https://api.whatsapp.com/send?phone=9600903800 என இருக்க வேண்டும்.

– இவ்வறு செய்ததும் ஸ்மார்ட்போனில் என்டர் பட்டனை கிளிக் செய்யவும்.

– இனி ஸ்மார்ட்போன் பிரவுசர் திரையில் வாட்ஸ்அப் திரை ஓபன் ஆகி, நீங்கள் பதிவிட்ட எண்ணிற்கு சாட் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பும். இங்கு சென்ட் மெசேஜ் (send message) எனக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

– அடுத்து நேரடியாக வாட்ஸ்அப் செயலி திறக்கும், இனி நீங்கள் பதிவிட்ட நபருடன் சாட் செய்ய துவங்கலாம்.

இனி வாட்ஸ்அப் செயலியில் கான்டாக்ட் சேவ் செய்யாமல் சாட் செய்ய வேண்டிய சூழ்நிலைகளின் போது இதே வழிமுறையை பின்பற்றலாம்.

கான்டாக்ட்-ஐ சேமிக்காமல் வாட்ஸ்அப் சாட் செய்வது எப்படி?

Leave a Reply