IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

’வீவ்ஸ் 2019’ தென்னிந்தியாவின் பிரமாணட ஜவுளிக் கண்காட்சி

1

இந்திய தொழில் கூட்டமைப்பும் டெக்ஸ்வேலி இணைந்து நடத்தும் தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி ‘வீவ்ஸ் 2019’ என்ற பெயரில் ஈரோட்டில் நடக்க உள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் ஜவுளி தொழில் செய்யும் சிறு மற்றும் குறு தொழிலாளிகளும் பயன் பெற்று வருகின்றனர்.


இந்த கண்காட்சி குறித்து டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் டி.பி.குமார் கூறியதாவது:- ஈரோட்டில் நவம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை வீவ்ஸ் தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி 2-ம் ஆண்டாக நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி இதே தொழில் தொடர்பான சமூகத்தினரின் ஆர்வத்தை தூண்டுவதுடன், கண்காட்சியை பார்க்க வருவோரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது.


கைத்தறி, பவர்தறி துறையை ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் கண்காட்சி ஆகும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 250 மேற்பட்டோர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள் என தெரிவித்தார்.


வீவ்ஸ் 2019 கண்காட்சியின் நோக்கம் குறித்து டெக்ஸ்வேலி துணை தலைவர் சி. தேவராஜன் கூறுகையில்:- வர்த்தகம், நெட்வொர்க்கிங், உள்ளூர் தொழில் முனைவோரை உலக அளவில் இணைத்தல், பிராண்ட் புரோமோஷன், ஒருவருக்கு ஒருவரான சந்திப்பு உள்ளிடவை ஆகும் என்றார்.


வீவ்ஸ் 2019 குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு மதுரை தலைவர் நாகராஜ் கூறுகையில்:- பல நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் மதுரை ஜவுளிகளின் மையமாக விளங்குகிறது. இப்பகுதியை சுற்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். அவர்கள் 95% நெய்தல் ஆடைகளையும், 5% பின்னல் ஆடைகளையும் தயாரிக்கின்றனர். இந்த ஆண்டு வருமானம் 1800 கோடி முதக் 2200 கோடி ரூபாய் ஆகும். இந்த துறை ஒவ்வொரு ஆண்டும் 10% முதல் 20% வரை வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.


உலக ஏற்றுமதி நிறுவனங்கள், பிரபலமான சில்லறை நிறுவனங்கள், உலகளாவிய பிரபல வர்த்தக நிறுவனங்கள் என இன்னும் பலர் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

#weaves #erode #texvalley