Primary Menu

Top Menu

June 24, 18

‘விசுவாசம்’ படத்தில் அஜித் இரண்டு கெட்டப்!!

சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 22ம் தேதி துவங்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால், படத்தில் நடிகர் அஜித் இரண்டு கதாபாத்திரம் என்றும், அண்ணன், தம்பி போல் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், ஒரு கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுடன் தல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கதை மற்றும் சம்பளம் பற்றி பேசாமல் அஜித்தின் மேல் வைத்துள்ள மரியாதையால் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டன.

Leave a Reply