Primary Menu

Top Menu

June 23, 18

‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இதோ !!

‘விஸ்வரூபம்-2’ படத்தை இயக்கி, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளதுடன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார். ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தியில் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 04:50 மணிக்கு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

 

கமல்ஹாசன் கடந்த ஒரு வருடமாக பிக்பாஸ், என்னுள் மையம் கொண்ட புயல், அரசியல் எனத் தன்னை பெரும் பரப்புக்குள்ளேயே வைத்து வருகிறார். அரசியலில் புதிய கட்சி தொடக்கம், அதன் நிர்வாகப் பணி என பயணிக்கத் தொடங்கிய கமல், தற்போது மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்போது எடுத்த மேக்கிங் வீடியோ ஒன்று 2014-ம் ஆண்டு வெளியிடப்படது. அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது இயக்குநர், நடிகர் கமலின் அசாத்திய ஸ்டன்ட் காட்சிகள் உருவான விதம் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பைத் துண்டும் வகையில் உள்ளது.

இசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...

Leave a Reply