Primary Menu

Top Menu

October 22, 18

விஸ்வரூபம் 2 : ஆஸ்கர் விருது நிச்சயம்!!

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கமல் ஹாசன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பு ஆகியவற்றின் மூலம் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வெளிநாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்ட இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், காசி மற்றும் ராம் முத்துராம் ஆகிய திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்குரிய விஷூவலுக்காக இப்படம் நிச்சயம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும், ஓசூரில் உள்ள பாலாஜி திரையரங்குகளில் கமல் ஹாசனுக்காக ரூ.3.50 லட்சம் செலவில் 50 அடி நீளத்தில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon