Primary Menu

Top Menu

September 20, 18

“மக்கள் நல இயக்கம்”என்ற புதிய அமைப்பை தொடங்கிய  நடிகர் விஷால்

நடிகர் விஷால் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன்பிறகு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் விஷால்.  நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஷால் திடீரென மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார். இப்போது விஷால் அதேபோன்ற ஒரு பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளார்.
விஷால் அமைப்பிற்கான விளம்பரத்தில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்கள் உள்ளன. விஷால் போட்டோ நடுவேயும், இருபக்கமும் அன்னை தெரசா மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் படங்களும் இடம் பெற்றுள்ளன.
மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கிய  நடிகர் விஷால் பேசும் போது  கூறியதாவது:-
வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது, சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம். அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான்; ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. என கூறினார்.
Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon