Primary Menu

Top Menu

September 23, 18

பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்ய வருகிறது விர்ச்சுவல் க்ளோத்ஸ்

இ-காமர்ஸ் துறையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ளது அமேசான் நிறுவனம், ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு சாதனங்களை மிக எளிமையாக தேர்வுசெய்து அமேசான் தளத்தில் வாங்க முடியும். பல்வேறு மக்கள் ஆடைகளை தேர்வு அதிக நேரங்கள் தேவைப்படுகிறது, அதன்பின்பு தங்களுக்கு பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்வதில் பல சிக்கல் உள்ளது.

இதுபோன்ற பல பிரச்சனைகளை தவிர்க்க பாடி லேப்ஸ் என்ற நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து விர்ச்சுவல் க்ளோத்ஸ் எனும் 3டி முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இனிமேல் மக்கள் மிக எளிமையாகவும், தங்களுக்கு பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட பாடி லேப்ஸ் என்ற நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் மற்றும் பாடி லேப்ஸ் நிறுவனங்கள் இணைந்து விரைவில் இந்தப் பயன்பாட்டை அனைத்து இடங்களுக்கும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை ஆடைகளை தேர்வு செய்ய விர்ச்சுவல் ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் கற்பனை கண்ணாடி வேலைசெய்கிறது, மேலும் தகுந்த ஆடைகளை எளிமையாக தேர்வு செய்யமுடியும். அதன்பின்பு உயரமாகவும், கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் தங்களுக்கு தகுந்த ஆடைகளை அட்டகாசமாக தேர்வு செய்ய முடியும்.

விர்ச்சுவல் ஸ்கேன் பொதுவாக எவ்வாறு வேலைசெய்கிறது என்றால் காமிராக்கள் மற்றும் ப்ரொஜெக்டர்களின் கலவையைப் பயன்படுத்துகிறது, மேலும் விர்ச்சுவல் மாதிரியை உருவாக்க சூழலை ஸ்கேன் செய்வதன் மூலம் கற்பனை கண்ணாடியில் வேலைசெய்கிறது. அதன்பின்பு எந்த பொருளைக் கண்டறிவது என்பதை நிர்ணயிக்க பயனரின் முகத்தையும், கண்களையும் அடையாளம் காட்டுகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon