Primary Menu

Top Menu

September 22, 18

என்னுடைய ஒரே கேள்வி இதுதான் – விராட் கோஹ்லி

ஆசிபா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர்-நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

விராட் கோஹ்லி வீடியோவில் பேசியது :

நான் உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் என்று விராட் கோஹ்லி வீடியோ பேச்சில் இருந்து தொடங்குகிறது.”உங்கள் குடும்பத்தில் இப்படி விஷயம் நடந்தால், அதையும் இதேபோல் நின்று வேடிக்கைதான் பார்ப்பீர்களா, இல்லை நீங்கள் சென்று குரல் கொடுப்பீர்களா?என்னுடைய ஒரே கேள்வி இதுதான்” என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ”சிலர் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்க அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு விஷயம் நடக்கும் போது அவர்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை. ஒரு சிறுமிக்கு இப்படி நடப்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இல்லை” என்று வருத்தமாக தெரிவித்துள்ளார். முக்கியாமாக ”சில ஆண்கள் இதுதான் வாய்ப்பு என்று தவறு செய்கிறார்கள். பின் அதில் இருந்து தப்பிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களும், அதற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதைவிட மோசமான விஷயம் என்ன இருக்க முடியும். ” என்ற வரிகளை பேசிக்கொண்டு இருக்கும் அவர் மிகவும் சோகமாகிவிடுகிறார். கடைசியாக ”நம் சமூகத்தில் சிலர் இது போன்ற விஷயங்களை எளிதாக சகித்துக் கொள்கிறார்கள். அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இது போன்ற சமூகத்தில் இருக்கவே வெட்கமாக இருக்கிறது. நம்முடைய சிந்தனைகளை நாம் மாற்ற வேண்டும். நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று நினைத்து பாருங்கள். பொறுப்பானவர்களாக இருங்கள். ஜெய் ஹிந்த்” என்றுள்ளார்

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon