Primary Menu

Top Menu

September 22, 18

3வயது மகனின் தலையை டாய்லெட்டில் முக்கி தண்டனை கொடுத்த தாய்…!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 3 வயது மகனின் தலையை வெஸ்டர்ன் டாய்லெட்டில் முக்கி தண்டனை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்த கைட்லின் உல்ஃப் என்பவர் தனது 3 வயது குறும்பு மகனுக்கு வித்தியாசமாக தண்டனை கொடுத்துள்ளார்.

 

அவர், தனது மூத்த மகன் வீடியோ பதிவு செய்ய, இவர் இளைய மகனின் கைகளை பிடித்துக்கொண்டு, டாய்லெட்டில் அவரது தலையை முக்கி எடுக்கிறார்.

 

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். சமூக ஆர்வலர்கள் பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து போலீசார் விசாரணைக்காக சென்றபோது, “அதனை ஒரு விளையாட்டாகதான் செய்தோம். அவனை காயப்படுத்தும் நோக்கோடு செய்யவில்லை. அதனை அவனும் ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டான்.

 

வீடியோவை பார்க்கும்போதே அவன் குதூகலிப்பது உங்களுக்கு தெரியும்” என விளக்கமளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர்மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் சமூக வலை தளங்களில் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon