Primary Menu

Top Menu

September 26, 18

வரம் தரும் விநாயகர் ?

இந்துக்களின் மூல முதற்பொருளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இந்துக்களின் வாழக்கையில் அவரை துதித்தே அனைத்தையும் ஆரம்பிக்கின்றோம்;. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவர் விநாயகர் இவரைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் மனதில் பக்தி தோன்றுகிறது.

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று நம் கையாலேயே பிடித்து வைத்து நாம் பூஜை செய்வதால் நமக்குப் பிடித்தமான தெய்வமாக இருக்கிறார். நம் வினைகளைத் தீர்த்து வைப்பதால் விநாயகர் என்று போற்றுகிறோம். சிவ கணங்களுக்குத் தலைவராதலால் கணபதி என்றும் கணேசர் என்றும் வணங்குகிறோம்.

விநாயகர் ஆதி பரம்பொருள். வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் தரும் மூத்தோன். வினைகளைத் தீர்க்கும் விக்னேஷ்வரன்.

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழங்கப்படுகின்றன.

 

 

Comments

மதுரை நகரின் சிறப்புகள்

இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon