Primary Menu

Top Menu

September 23, 18

நானும் பொண்ணுதாங்க எனக்கும் எல்லா உணர்ச்சிகளும் இருக்கு – ‘மைனா’ நந்தினி

‘மைனா’ நந்தினியை அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது. கணவரின் தற்கொலைக்குப் பின்னர், நந்தினி பற்றி பல எதிர்மறையான கருத்துகள் துரத்தின. அவற்றையெல்லாம் சவாலுடன் எதிர்கொண்டு, தற்போது மீடியா துறையில் பிஸியாக இருக்கிறார். அவருடன் பர்சனல் சாட்!

”மீடியாவில் நீங்க பார்க்கும் நந்தினிக்கும் நேரில் பார்க்கும் நந்தினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னைப்பற்றி நானே சொல்லக்கூடாது. இருந்தாலும் கேட்டுட்டீங்களேனு சொல்றேன்” என  பேசத் தொடங்கினார்.

”சின்ன வயசிருந்தே நான் பொறுப்பான பொண்ணு. என் அம்மாவும் அப்பாவும் கஷ்டப்படுறதைப் புரிஞ்சுக்கிட்டு இது வேணும், அது வேணும்னு அடம்பிடிச்சதே இல்லை. என்னால் முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்க நினைச்சேன். எங்க வீடு ரொம்பவே சின்னது. டிவிகூட கிடையாது. அந்த அளவுக்கு ஏழ்மையான குடும்பம். என் குடும்பத்தை பெரிய லெவலுக்குக் கொண்டுவர்றது என் கனவா இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போதே டைப்ரைட்டர் வேலைக்குப் போனேன். ஆர்ஜே, வீஜேனு நான் பார்க்காத வேலையே கிடையாது. அந்த அளவுக்கு உழைச்சேன். இப்போ என் முகம் வெளியில் தெரியுதுன்னா, அதுக்குப் பின்னாடி கடின உழைப்பும் என் பெற்றோர் கொடுத்த தன்னம்பிக்கையும் இருக்கு”.

”என் குடும்பத்துக்கே நகைச்சுவை உணர்வு அதிகம். ஏதாச்சும் சீரியஸா பேசிட்டிருக்கும்போது, அம்மா அசால்டா கலாய்ச்சுட்டுப் போயிடுவாங்க. வெளியில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டா, எல்லாம் மறந்துடும். அது, எனக்குள் நகைச்சுவை உணர்வை அதிகம் கொடுத்துச்சு. மதுரைக்காரங்களுக்கு லந்து இல்லாமல் இருக்குமா? எவ்வளவுதான் மத்தவங்களைக் கலாய்ச்சாலும், அவங்க மனசு புண்படாமல் கவனமா இருப்பேன். அதனால்தான், ஜீ தமிழின் ‘காமெடி கில்லாடிஸ்’ நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்திருக்கேன். காமெடி கில்லாடிஸில் கலந்துகொண்ட எல்லோருமே அவங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கப் போராடுறவங்க. என்னால் முடிஞ்ச அளவு அவங்களை உற்சாகப்படுத்துறேன். அந்த செட்டில் டபுள் மீனிங் ஜோக்ஸையும் தவிர்க்கச் சொல்லி அட்வைஸ் பண்றோம்.

என் கணவர் இறந்ததும் எல்லோரும் என்னைக் கடுமையா விமர்சனம் செஞ்சாங்க. நானும் பொண்ணுதாங்க. எனக்கும் எல்லா உணர்ச்சிகளும் இருக்கு. எனக்கும் குடும்பம் முக்கியம். என் அம்மா, அப்பா, தம்பி மூணு பேருமே எனக்குக் குழந்தைகள் மாதிரி. அவங்களுக்காக நான் இங்கே இருந்துதான் ஆகணும். சிரிக்கிறது, டான்ஸ் ஆடுறது, பாட்டுப் பாடறது என்னுடைய வேலை. அதை நான் செஞ்சுதான் ஆகணும். விமர்சனம் பண்றவங்களால் என்னைப் புரிஞ்சுக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா புரிய வெச்சுட்டு இருக்கும் அவசியமும் எனக்கு இல்லை.

நான் நானாக இருக்கேன். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கேன். அதனாலதான் எல்லோரையும் ஈஸியா நம்பி ஏமாந்துடறேன். இந்த ஒரு வருஷத்தில் நிறைய கத்துக்கிட்டேன். அழறது ஒண்ணும் கேவலம் கிடையாது. அழுகையின் மூலமா ஒரு அமைதியையும் தெளிவையும் உணரமுடியும். ‘நீலி’ சீரியலில் நடிக்கும்போதெல்லாம் நான் கிளிசரின் பயன்படுத்தவே இல்லை. இன்னும் நிறைய ஹார்டு ஒர்க் பண்ணி என் ஃபேமிலியை பார்த்துப்பேன். எந்தப் பிரச்னை வந்தாலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கும் என் நண்பர்களுக்கு நன்றி” என அழுத்தமான குரலில் சொல்கிறார் ‘மைனா’ நந்தினி.

 

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon