Primary Menu

Top Menu

September 23, 18

உலகநாடுகளை திசைதிருப்பிய வைபிரன்ட் தமிழ்நாடு – அமைச்சர் உதயகுமார்

மதுரை விரகனூர் சுற்று சாலையில் உள்ள தனியார் அரங்கில் 4 நாட்கள் நடைபெறும் பல முன்னணி நிறுவனங்களின் வைபரண்ட் தமிழ்நாடு என்ற உணவு பொருள் கண்காட்சி – வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.
மதுரை புறநகர் விரகனூர் சுற்று சாலையில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் தலைவர் k.t.ராஜன் தலைமையில் வைபரண்ட் தமிழ்நாடு என்ற உணவு பொருள் கண்காட்சி இன்று துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆச்சி மசாலா, மயில் மார்க் அரிசி, மதுரை சிந்தாமணி சாஸ்தா அப்பளம் உட்பட வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தயாரிப்புக்களை வெளிப்படுத்தினர்.
மதுரை, திண்டுக்கல், மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி சென்றனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று  வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் வீர்ரகவராவ் மற்றும் மேலூர் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், பெரியபுள்லான்  உட்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

கண்காட்சியில் கலந்து கொண்ட கத்தார்,லண்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் உதயகுமார் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். குறிப்பாக மதுரை சிந்தாமணி பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் அப்பளம் மலேஷியா சிங்கப்பூர் நடைபெற்ற விவசாய – உணவு பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயகுமார் பேட்டி .
தமிழ்நாடு வர்த்தக சங்கம் சார்பில் நடைபெறும் “வைபிரன்ட் தமிழ்நாடு ” எனும் விவசாய – உணவு கண்காட்சியின் மூலம் தமிழகத்தை குறிப்பாக மதுரையை உலக நாடுகள் பக்கம் கவனம் ஈர்த்துள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்து மதுரையில் இது போன்ற சர்வதேச நிகழ்வுகள் நடைபெறுவதற்கு வர்தக சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் வாழ்த்துகிறேன் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon