Primary Menu

Top Menu

August 16, 18

வைப்ரன்ட் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சந்திப்பு

வைப்ரன்ட் தமிழ்நாடு மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக நிகழவிருக்கும்… “அனைத்துலக வேளாண் மற்றும் உணவுப் பொருள் வர்த்தகப் பொருட்காட்சி” இப்பெரும் நிகழ்வினை விளக்க பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

வைப்ரன்ட் தமிழ்நாடு அமைப்பிற்கு வைஸ் சேர்மேன் ஆக பொறுப்பு ஏற்றிருக்கும் திரு. திருப்பதிராஜன் அவர்கள் கூறியதாவது…

“இக்கண்காட்சியை பற்றி விளக்கிக் கூற 20 நாடுகளுக்குச் சென்று வெளிநாடுவாழ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளேன். மதுரையை International Business Destination ஆக மாற்றும் முயற்சியில் நாங்கள் அனைவரும் இணைந்து ஈடுபட்டுள்ளோம்.
இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற மேலை நாடுகள்…


மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, நேபால் போன்ற ஆசிய நாடுகள் என பலநாடுகளிலிருந்ந்தும் ஆர்வத்துடன் பல முதலீட்டாளர்கள் கண்காட்சியினைப் பார்வையிட உறுதி செய்து இந்தியா வரவும் தயாராகிவிட்டனர்.

வெளிநாடுகளில் தமிழர்கள் பல லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழர் உணவுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழக வேளாண் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்ல தயாராக உள்ளது அவர்களிடம் உரையாடிய பொழுது தெரிய வந்தது.

ஆக இக்கண்காட்சி நல்லதொரு உள்நாட்டு வியாபார நோக்கத்தோடு மட்டுமல்லாது ஏற்றுமதி செய்யவும் பெருக்கவும் வழிவகுக்கும். அனைத்து தொழில் ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.”

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon