Primary Menu

Top Menu

September 20, 18

மதுரையில் மிகப் பிரம்மாண்ட “வைப்ரன்ட்-தமிழ்நாடு” கண்காட்சி

வேளாண் மற்றும் உணவுப் பொருள் கண்காட்சி இன்று மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக வேலம்மாள் வளாகத்திலுள்ள பெரிய அரங்கத்தில் துவங்கப்பட்டது.
.
தமிழ்நாடு வணிக சங்கத் தலைவர்கள், மதுரைத் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள், வெளி மாநில மமற்றும் வெளிநாடுவாழ் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்ட மிகப்பெரும் விழாவென மிகச் சிறப்புடன் தொடங்கியது.

குளிரூட்டப்பட்ட அரங்குகளில் நூற்றுக் கணக்கான ஸ்டால்களில் பலவித வண்ண வண்ண வடிவங்களில் வேளாண் பொருட்கள் உணவுப் பொருட்கள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டு கடைக்காரர்கள் விளக்கிக் கொண்டிருந்தது அருமை.
.
உணவுக் கூடங்களில் நம்நாட்டு குளிர்பானங்கள், சிறுதானிய உணவு வகைகள், பலவேறு உணவு வகைககள் அனைத்தும் சுடச்சுட கிடைக்கின்றன. வெளிநாட்டு தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் விரும்பி வாங்கி சுவைத்தனர்.

முதல் நாளிலேயே மக்கள் கூட்டமும் அலை மோதுகிறது. சர்வதேச வசதியுடன் அமைக்கப்பட்ட இப்பெரிய கண்காட்சி இன்னும் மூன்று நாட்கள் (ஆகஸ்ட் 15வரை) நடைபெற உள்ளது.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon