Primary Menu

Top Menu

July 20, 18

‘வேட்டை நாய்’ படத்திற்காக ஒன்றிணையும் முன்னணி நாயகர்கள்!!

‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமான பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதன் படி தற்போது ‘வேட்டை நாய்’ படத்தினை எஸ்.ஜெய்சங்கர் என்பவர் இயக்குகிறார். இதில் ஆர்.கே.சுரேஷிற்கு ஜோடியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். இதனையடுத்து இப்படத்தின் டீசரை ஜூலை 6ம் தேதி விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து மாலை 4.30 மணிக்கு வெளியிடவுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தாய் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இயக்குனர் ஜெய்சங்கர் பேசும்போது, ‘‘படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன்! ஆனால் அடிப்படையில் அவன் அவ்வளவு நல்லவன். ஆனால் அது அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட ஒரு பெண் அவன் யார் என்று உணர வைக்கிறார். இதற்காக அவர்கள் என்னென்னெ பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள் என்பது தான் ‘வேட்டை நாய்’ படத்தின் ஒரு வரி கதை’’ என்றார்.

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply