Primary Menu

Top Menu

July 19, 18

வேலைக்காரன் திரைவிமர்சனம்

எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் தான் வேலைக்காரன்.

சேரிப்பகுதியில் எஃப்.எம் ஸ்டேஷன் கட்டுவதில் லோக்கல் தாதா பிரகாஷ்ராஜ்க்கும் (காசி), படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து, தன்னுடைய எஃப்.எம் ஸ்டேஷன் உயர்த்துவதற்கு மக்களின் உழைப்பை எவ்வளவு எளிதாக சுரண்டுகிறார் என்பதை அறிவு ( சிவகார்த்திகேயன்), உணர்கிறார்.

அதன் பிறகு எஃப்.எம்.சி.ஜி என்ற நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஆக பணியாற்றுகிறார். அங்கே ஆதியை (பகத் பாசில்) சந்திக்கிறார். கடினமான வேலை எல்லாம் தேவையில்லை. ஸ்மார்ட்டான வேலை தான் முக்கியம் என்று உணர்ந்து வேலை செய்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் தன்னால், இந்த சமூகம் எவ்வளவு பெரிய பிரச்சனையை சந்திக்கிறது என்பதை உணர்ந்து செயலாற்றுகிறார்.

அதன் பிறகு தொடர்ந்து, கடினமான வேலை, ஸ்மார்ட்டான வேலை என்று எதுவும் தேவையில்லை. நல்ல வேலை ஒன்றே போதும் என்பதை முதலாளி வர்க்கத்துக்கு எடுத்துக்காட்டுவதே இப்படத்தின் மையக்கரு.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெற்றிக்கூட்டணி:
இயக்குனர்: மோகன் ராஜா – தனி ஒருவன் படத்தின் வெற்றியை கொடுத்தவர்.
நடிகை: நயன்தாரா – சமீபத்தில் வந்த அறம் படம் இவரது வெற்றிப்படம்.
நடிகர்: சிவகார்த்திகேயன் – ரெமோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்:
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன் முறையாக இப்படத்தின் மூலம் சீரியஸ் அவதாரம் எடுத்துள்ளார். அறிவு என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இனிமேல் விளம்பரப் படங்களில் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நயன்தாரா

சமீபத்தில் இவரது நடிப்பில் வந்த வெற்றிப்படம் அறம். இப்படத்தை முடித்தக் கையோடு அப்படியே இப்படத்தில் நடிக்க வந்துவிட்டார். முதன் முறையாக இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மற்ற படங்களைப் போன்று அல்லாமல், நயனின் நடிப்பில் வந்துள்ள வேலைக்காரன் அவருக்கு சிறந்த படமாக இருக்கும்.

மலையாள நடிகரின் அறிமுகம்:

இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பஹத் பாசில் தமிழில் அறிமுகமாகிறார். நிவின் பாலி மற்றும் துல்கர் சல்மான ஆகிய நடிகரைப் போன்று அல்லாமல், வெறும் கதையை மட்டும் கேட்டு இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அது ஹீரோவா, வில்லனா என்று எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று தெரியாமல் நடிக்க வந்துள்ளார்.

அனிருத் இசை:

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. 3, எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ ஆகிய 5 படங்களைத் தொடர்ந்து அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் 6வது படமாக வேலைக்காரன் உருவாகியுள்ளது.

சினேகா: முன்னாள் ஹீரோயினான இவர் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அக்காவாக நடித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ்: லோக்கல் தாதாவாக நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து சதீஷ், தம்பி ராமையா, காளி வெங்கட், ரோகினி, ரோபோ சங்கர், மைம் கோபி, ஆர்.ஜே.பாலாஜி, வினோதினி வைத்யநாதன், சார்லி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலி கான், அருள்தாஸ், ராமதாஸ், மகேஸ் மஞ்ரேக்கர், பாலாஜி வேனுகோபால், ஷரத் லோகிடஸ்வா, அனிஸ் குருவிலா, உதய் மகேஸ், மதுசூதனன் ராவ், யுவலட்சுமி, தினேஸ்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்: மோகன் ராஜா
தன்னுடைய சகோதரர் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் மோகன் ராஜா. எப்படி விஜய்க்கு வேலாயுதம் படம் இருந்ததோ, அதே போன்று சிவகார்த்திகேயனுக்கு வேலைக்காரன் அமைந்துள்ளது. தனி ஒருவனைப் போன்று தற்போது வெளியாகியுள்ள வேலைக்காரன் படமும் மாபெரும் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

திரிஷாவின் அசைவுகள் எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது -ஸ்ரீரெட்டி

திரிஷாவை பார்த்துதான் தான் சினிமாவுக்கு...

Leave a Reply