Primary Menu

Top Menu

September 26, 18

இலவச வீட்டுமணை பட்டாவிற்கு லஞ்சம் கேட்கும் VAO மீது மக்கள் புகார்

ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் இலவசவீட்டு மணை பட்டாவை விற்பனை செய்ய முயலும் சக்கிமங்கலம்II பிட் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சக்கிமங்கலம்II பிட்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாவை விற்பனை செய்ய முயலும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது கடந்த 20 வருடமாக சக்திமங்கலம் II பிட் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் அனைவரும் கூலித் தொழிலாளிகள் நாங்கள் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் ஆனால் இதற்க்கு முன்னாள் ஆட்சியர் நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டார் ஆனால் இப்போது சக்கிமங்கலம்II பிட் கிராம நிர்வாக அலுவலர் இலவச வீட்டுமனை வழங்க ரூ 10000 முதல் 15000 வரை பணம் கேட்கிறார் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்துள்ளோம் எனக் கூறினார்

பேட்டி:அக்பர் கிராம பொதுமக்கள்

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon