IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ

0


ஊரே வெள்ளக்காடாய் அடித்துச் செல்லும் ரணகளமான நேரத்திலும் தண்ணீரில் ஆட்டம் போட்ட கிளுகிளு தம்பதியர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.


இந்த வருடம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தற்போது வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்மழை பெய்ந்து கொண்டே வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் அதிகமாக காணப்பட்டுள்ளது.


குறிப்பாக வடமாநிலங்களான உத்திர பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்திலிருந்து தீவிரம் காட்டி வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்கி குளம்போல வீடுகளில் தேங்கியுள்ளன. இதனால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. அதில் வெளியேற்றிக் கொண்ட கணவர் தன் மனைவி, நீச்சல் அடிக்க ஆசைப்பட்டதை நிறைவேற்றியுள்ளார். இடுப்பளவிற்கு வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மனைவியை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு நீச்சல் பழகிக் கொடுக்க ஆரம்பித்தார். மனைவியும் வீடு முழுக்க தண்ணீர் நிரம்பியதை எண்ணிப் பார்க்காமல் ஜாலியாக நீச்சல் அடித்து மகிழ்ந்தார்.


எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனைவியை நீச்சலடிக்க விட்டு கணவரும் சந்தோஷமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த இளைஞர்களால் வீடியோவாக பதியப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.