Primary Menu

Top Menu

September 25, 18

உலக அளவில் ட்ரெண்ட் ஆன RIP Kalaigar !!

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைவால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெரினாவில் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த  காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு  சிறுநீரக தொற்று மற்றும் காய்ச்சல் அதிகமானதால் காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரது முக்கிய உடல் உறுப்புக்கள் செயலிழந்தது.

இந்நிலையில் 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே கருணாநிதி இயற்கை எய்திவிட்டார். மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் மறைவால் அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தல் ட்ரென்ட் ஆகியுள்ளது. மேலும் RIP Kalaignar என்பது உலகளவில் மூன்றாவது இடத்தில் ட்ரென்ட் ஆகியுள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon