Primary Menu

Top Menu

April 24, 18

தூத்துக்குடியில் மிரளவைக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் !!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் 43வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Image result for starlight protest tuticorin

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை கடலில் கலப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும், தினமும் ஐந்து கோடி லிட்டர் தண்ணீர் ஆலைக்கு வழங்கப்படுகிறது.  ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதை அவசர நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மூட வலியுறுத்தியும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இந்திய வாலிபர் சங்கம் சார்பில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த 24-ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகே நடந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் சுமார் 20,000 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Image result for starlight protest tuticorin

அரசு தாமதப்படுத்தினால், மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஆலையை மூடும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்றும் போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply