Primary Menu

Top Menu

August 18, 18

டிடிவி தினகரனின் கட்சிக் கொடி மீது முதல்வர் பழனிச்சாமி வழக்கு

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் நேற்று தனது புதிய கட்சிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது.

டிடிவி தினகரனின் கட்சிக் கொடி அதிமுக கொடி போல உள்ளதால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக கொடியும், தினகரனின் கட்சி கொடியும் ஒரே மாதிரி உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை அரசு தரப்பில் சிவில் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

1 Comment

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon