Primary Menu

Top Menu

September 21, 18

பாக்‌சிங் பயிற்சியில் நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் த்ரிஷா. இந்த வீடியோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ‘ஹே ஜூட்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதற்காக எப்போதும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் த்ரிஷா.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon