Primary Menu

Top Menu

September 21, 18

கர்பிணிப்பெண் மரணத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது

கர்பிணிப்பெண் மரணத்திற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி திருவெறும்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.  போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே தலைகவசம் அணிந்து செல்கிறார்களா என்பதைக் கண்டறியும் நோக்கில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தி வந்தனர். அந்த வழியாக வந்த தர்மராஜா – உஷா தம்பதியினர், காவல்துறையினரைக் கவனிக்காமல் கடந்து சென்றுள்ளனர். அப்போது காமராஜ், வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் சென்று, அந்த தம்பதியினர் சென்ற இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதில் தடுமாறி இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைத்தனர். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

Image result for trichy protest usha pregnant lady death

பொது மக்கள் திரண்டு காயமடைந்த ராஜாவை திருவெறும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்ப்பிணிப்பெண் மரணத்துக்கு காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon