IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சாஸ்திரம் சம்பிரதாயங்களுடன் மீண்டும் திறக்கப்பட்டது லலிதா ஜுவல்லரி

85


பலத்த பிரச்சனைகளுக்கு பிறகு சாஸ்திரம் சம்பிரதாயங்கள் பார்த்து மீண்டும் திருச்சி லலிதா ஜுவல்லரி திறக்கப்பட்டது.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம்தேதி அதிகாலை கடையின் பின்புறம் சுவற்றை துளைத்து சுமார் 13 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.


இந்த கொள்ளையில் சம்பம்பந்தப்பட்டவர்களை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் மணிகண்டன் என்பவரை திருவாரூர் போலீசார் கைது செய்து திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்றும் அவருடன் கூட்டாளியான சுரேஷ் என்பவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற கொள்ளையர்களை போலீசார் தீவரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை விபரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் மட்டும் ஹெல்மெட் போட்டிருந்தால்…?! கதறி அழும் லலிதா ஜுவல்லரி கொள்ளையனின் மனசாட்சி!


இந்த கொள்ளை சம்பவத்தால் கடந்த 2ம் தேதியிலிருந்து நகைகடை திறக்கப்படவில்லை. 3ம் நாளான இன்று இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து சென்ற பிறகு கடைமுழுவதும் சுத்தம் செய்யப்பட்டு ஷோகேஷ்களில் புதிய நகைகள் அடுக்கப்பட்டது. அதன்பிறகு இன்று மாலை கடைமுன்பு கண்திருஷ்டி கழிக்கப்பட்டு மீண்டும் கடை திறக்கப்பட்டது.
#lalithaJewellery #Trichy #In4net