Primary Menu

Top Menu

September 21, 18

டி.ராஜேந்தர் இயக்கும் படத்தின் தலைப்பு ’இன்றைய காதல் டா’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்கும் படத்துக்கு ’இன்றைய காதல் டா’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

’வீராசாமி’க்குப் பிறகு படம் இயக்குவதை நிறுத்தியிருந்த டி.ஆர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிய ’கவண்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் படம் இயக்குகிறார், டிஆர். அவர் இயக்கும் படத்துக்கு, ’இன்றையக் காதல்டா’ என்று டைட்டில் வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நமீதா லேடி டானாக நடிக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இதில் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், பாண்டு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏராளமான புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார் டி.ஆர்.

வழக்கம் போல கதை, திரைக்கதை வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை டி.ராஜேந்தரே ஏற்றுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் கூறியதாவது:  கவண் திரைப்படத்திற்கு பின் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் மறுத்துவிட்டேன். கவணை தொடர்ந்து கவனத்தை ஈர்க்க இன்றைய காதல் டா என்ற இந்த புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன்.

படம் முழுக்க முழுக்க காதல் கதை என்றும் இந்த படத்தை தான் எடுக்க காரணம் சிம்பு தான். இந்த படத்தில் புதிய நடிகர்கள் பலரை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  “புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர். தனி மனித ஒழுக்கம் நடிகர்களுக்கு அவசியம். ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது தமிழன் என்பதால் எதிர்க்கிறார்களா⁉”என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon