Primary Menu

Top Menu

September 25, 18

டிராஃபிக் ராமசாமி படத்தில் ரஜினியை முடிவு செய்தேன் – ஷங்கர்

விக்கி இயக்கத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார். டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் கூறியதாவது, “என் அடுத்தப்படம் ட்ராபிக் ராமசாமி வாழ்க்கையை மையமாக கொண்டதாக தான் இருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன், ஆனால், அதற்குள் என் குருநாதர் முந்திக்கொண்டார்” என்று கூறிய அவர், எஸ்.வி.சந்திரசேகர் நடித்துள்ள இப்படத்தை பார்க்க மிக ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon