Primary Menu

Top Menu

April 26, 18

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்

தக்காளியால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொண்டால் தக்காளி நம் வீடுகளில் நம் ஆரோக்கியத்தில் எத்தகைய முதன்மையான பங்கினை வகிக்கிறது என்பது தெரியவரும்.

பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைகாய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

உணவில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயை கணிசமான அளவுக்கு தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Image result for tomato benefits

தக்காளிக்கு சிகப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்த செல்கள் வேகமாக சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது. அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்தமுடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதை தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகிற மார்பக புற்று நோயிலிருந்து தப்பிக்க தக்காளியில் இருக்கும் carotenoids உதவிடும்.

Related image

இன்றைக்கு யாரைக்கேட்டாலும் மாரடைப்பு, பைபாஸ் சர்ஜரி என்று சர்வசாதரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.தக்காளி இதய நலனில் முக்கியப்பங்காற்றுகிறது. தக்காளியில் இருக்கும் க்ளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் சி ஆகியவை இதயம் சீராக இயங்குவதற்கு உதவி புரிகிறது. இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.

தக்காளியில் ஃபோலிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை எடுத்துக்கொண்டால் நம் மூளையில் homocysteine என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இது மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கச் செய்யும். அதோடு சீரான தூக்கம், எதற்கெடுத்தாலும் அதிகமாக உணர்சிவசப்படுவது, சட்டென கோபப்படுவது ,எரிச்சல் போன்றவற்றை சீர்படுத்த தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உதவிடும்.

Image result for tomato eat

தக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. விட்டமொன் ஏ ரெட்டீனாவின் செயல்பாடுகளுக்கு துணைபுரிகிறது. வயது மூப்பின் காரணமாக கண் பார்வையில் பிரச்சனை அதிகரிக்கும் அதனை தவிர்க்க தக்காளி போன்ற அதிகப்படியான lycopene, beta-carotene, மற்றும் lutein ஆகியவை அடங்கியிருக்கும் உணவினை எடுத்துக் கொண்டால் அவை கண் பிரச்சனையிலிருந்து நம்மை காத்திடும்.

Related image
தக்களியை தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. இதில் அதிகப்படியான தண்ணீர் சத்து இருக்கிறது இது நீர்க்கடுப்பு இருந்தால் தவிர்க்கச் செய்திடும். நம் உடலில் அதிகப்படியாக சேரும் நச்சு, யூரிக் அமிலம், உப்பு, கொழுப்பு போன்றவற்றை நீக்கச் செய்திடும்.

Image result for tomato eat

கர்பிணிப்பெண்களுக்கு ஏற்படுகிற வாந்தி மற்றும் குமட்டலை தக்காளி குறைக்கிறது.ஃபோலேட் என்கிற சத்து கர்பிணிப்பெண்களுக்கு மிகவும் அவசியமானது.குழந்தையின் வளர்சியிலும் ஃபோலேட் முக்கியப் பங்காற்றுகிறது. முதல் ட்ரைம்ஸ்டரில் தக்காளி அதிகமாக சேர்க்கலாம்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

உழைப்போம் நேர்மையாக !!

அந்தக் காலத்தில் TVS பஸ் நிறுவனம் தான்...

Leave a Reply