IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜவுளி உற்பத்தியில் காதி துணியின் பங்களிப்பு இரு மடங்கு வளர்ச்சி

2


இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் காதி துணியின் பங்களிப்பு 5 ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்ப்ஸனா மேலும் கூறியதாவது:


2014-15-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி 2,486 மில்லியன் சதுர மீட்டராக இருந்தது. இதில், காதியின் பங்களிப்பு 105.38 மில்லியன் சதுர மீட்டராகும். மொத்த ஜவுளி உற்பத்தியில் இது 4.23 சதவீதமாகும்.


இந்த நிலையில், 2018-19-ஆம் நிதியாண்டில் ஜவுளி உற்பத்தி 2,012 மில்லியன் சதுர மீட்டராக குறைந்தது. இதில், காதி துணியின் பங்களிப்பு 170.80 மில்லியன் சதுர மீட்டராகும். ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் இது 8.49 சதவீதமாகும்.


ஆக, கடந்த 2014-15-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5 ஆண்டுகளில் மொத்த ஜவுளி உற்பத்தியில் காதி துணியின் பங்களிப்பு இரண்டு மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது என்றார் அவர்.