IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விராட் கோலியை துரத்தும் ஸ்டீவ் ஸ்மித்

3


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக தரவரிசையில் நம்பர்-1
இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 3வது இடத்திற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறியுள்ளார்.


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி(ஆக 6) இன்று வெளியிட்டது. அதில் இந்திய அணிகேப்டன் விராட் கோலி 922 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.


இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 903 புள்ளிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் புஜாரா 881 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.


அடுத்த டாப் 10 வரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. முதன்முறையாக 2019 உலகப்கோப்பை போட்டியில் களமிறங்கிய இளம்வீரர் ரிஷப் பாண்ட் 673 புள்ளிகளுடன் 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.