IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தெலங்கானாவில் 48 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்

0 7


தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பேருந்துகள் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 1500 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். மற்ற ஊழியர்கள் வேலைக்கு வராமல் தொடர்ந்து 4வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.


#Telangana #Government Bus #Employees #Dismissed