IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஏர்ஹோஸ்டஸ் ரேஞ்சுல ரெயிலில் கலர்புஃல் கேர்ள்ஸ்! பயணிகள் உற்சாகம்!!

9


இந்தியாவில் முதன்முறையாக தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டது. பலநாட்கள் ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் என்று கூறிவந்த நிலையில் இன்று முதன்முதலாக லக்னோ – டெல்லி இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். முதல் நாள் சேவையில் இன்று 386 பயணிகள் பயணித்தனர்.


தேஜஸ் ரயில்வே பணியாளர்கள் அனைவரும் விமான பணியாளர்கள் போல் உடையணிந்து அன்பாக பயணிகளுக்குத் தேவையானவற்றை கொடுத்து கவனித்துக் கொண்டனர். அக்டாபர் 4 இன்று காலை 6.10 மணிக்கு கிளம்பிய இந்த ரயில், நண்பகல் 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது.


மறுமார்க்கத்தில், டெல்லியில் இன்று மாலை 3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோவை வந்து அடையும். இந்த ரயில் நாளை அக்டோபர் 5 முதல் வழக்கமாக டெல்லியில் இருந்து இயக்கப்பட உள்ளது. லக்னோவில் இருந்து நாளை மறுநாள் முதல் இயக்கப்படும். செவ்வாய் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.


கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோவில் இருந்து டெல்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும்.
#India #FirstCorporatised #Train #TejasExpress #In4Net