Primary Menu

Top Menu

September 26, 18

பேசினாலே போதும் அதுவே டைப் செய்யும் : வாட்ஸ்ஆப் புதிய வசதி

வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி இப்போது வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும், அதுவே டைப் செய்யும் வசதியைக் கொண்டுவந்துள்ளது.

வழிமுறை-1: முதலில் உங்கள் வாட்ஸ்ஆப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து language & input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் விருப்பத் தேர்வுசெய்து உள் நுழைய வேண்டும்.

வழிமுறை-3: அதன்பின்பு gboard- அமைப்பில் இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ஏபிசி எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-4: மேலும் gboard-அமைப்பில் இருக்கும் வாய்ஸ் டைப்பிங்-ஐ கிளிக் செய்து தமிழ் (இந்தியா) விருப்பத்தை தேர்ந்தேடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில் பேசினாலே போதும் டைப் செய்ய தேவையில்லை.

Comments

யூடியூப் கேமிங் ஆப் திடீர் நிறுத்தம் – கூகுள்

யூடியூப் வீடியோ பிளாட்பார்மில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon