பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு 2 ஏக்கர் நிலம் வழங்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. இது தொடர்பாக பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது பெங்களூரு தமிழ்ச் சங்கம். மேலும், இதற்காக ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் பாராட்டு விழா ஒன்றையும் நடத்த பெங்களூரு தமிழ்ச் சங்கம் தீர்மானித்துள்ளது.
