Primary Menu

Top Menu

September 23, 18

‘தமிழ்ப்படம்-2’ படத்தின் 2 நிமிட வீடியோ காட்சிகள்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்து வரும் படம் ‘தமிழ்ப்படம்-2’. இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார், என்.கண்ணன் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் 2 நிமிட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் தற்போது வரை பல்வேறு திரைப்படங்களையும், அரசியல் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையும் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டு வரும் படக்குழு சமீபத்தில் பாகுபலி, நடிகையர் திலகம், டார்க் நைட், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை சமீபத்தில் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டிருந்தது. படத்தின் டீசர் முதல் பாடல்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இயக்குநர் அமுதன் தற்போது அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

 

படத்தின் ரிலீசுக்கு நடுவே ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அமுதனிடம் ரசிகர்கள் படம் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்க, 12 என்று அவர் பதிலளித்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon