Primary Menu

Top Menu

September 25, 18

மீண்டும் மழை: அணைகள் நீர்மட்டம் உயர்வு

பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், முக்கிய அணைகளுக்கு, நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள, 15 முக்கிய அணைகளில் பல, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதால், அவற்றிற்கு தென் மேற்கு பருவ மழை காலத்தில் நீர்வரத்து கிடைக்கிறது.ஜூனில் துவங்கிய, தென் மேற்கு பருவமழை, இயல்பை விட அதிகளவில் பெய்ததால், ஏற்கனவே, பல அணைகள் நிரம்பி விட்டன.

அவற்றில் இருந்து, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது.கர்நாடகாவில் கொட்டி தீர்க்கும் மழையால், அங்குள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, உபரி நீர் திறப்பு வினாடிக்கு, 1.50 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், மேட்டூர் அணைக்கு, இன்று நீர்வரத்து வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி வரை, அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேனி – முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த, 2.4 செ.மீ., மழையால், வினாடிக்கு, 4,128 கன அடி நீர்வரத்து உள்ளது.

கோவை – சோலையாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த, 3.1 செ.மீ., மழையால், வினாடிக்கு, 4,381 கன அடி நீர்வரத்து உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், ஈரோடு – பவானிசாகர் அணைக்கு, வினாடிக்கு, 10 ஆயிரத்து, 766; திருப்பூர் – அமராவதிக்கு, 1,870; தேனி – வைகை அணைக்கு, 2,465 கன அடி நீர்வரத்து உள்ளது.

மேலும், கோவை – பரம்பிக்குளம் அணைக்கு, 4,393; திருநெல்வேலி – பாபநாசம் அணைக்கு, 2,868; கன்னியாகுமரி – பேச்சிப்பாறை அணைக்கு, 1,459 கன அடி நீர்வரத்து உள்ளது. மழை தொடர்வதால், பல அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon