Primary Menu

Top Menu

September 26, 18

தமிழகம் – புதுவையில் இடியுடன் கூடிய கனமழை : மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சட்டிஸ்கர் அருகே நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் அருகே நிலைக்கொண்டுள்ளதாகவும், இதனால் வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon