Primary Menu

Top Menu

September 21, 18

ஜெயித்தாலும் தோற்றாலும் அரசியலில் தொடருவேன் – கமல்

சென்னை நுங்கம்பாக்கத்தில், இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் மேடையில் பேசுகையில், “ஜெயித்தலும் தோற்றாலும் அரசியலில் தொடருவேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, “காவிரி நதிநீர் விவகாரம் எளிதில் தீர்க்கக் கூடியது. மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். உரிமைகளைப் பெற நிச்சயம் போராடித்தான் ஆகவேண்டும்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, தமிழகத்தில் மழைநீர் அளவு அதிகமாகவே உள்ளதாகவும், அதை சேமித்துவைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கமல் கேட்டுக் கொண்டார். கல்வியை விட டாஸ்மாகிற்கு அரசு அதிக அக்கறை காட்டுவதாகக் கூறிய கமல், பத்தாம் வகுப்பு தகுதியாகக் கொண்ட விஏஓ தேர்வுக்கு பொறியாளர்களும், பி.எச்.டி பயின்றவர்களெல்லாம் தேர்வு செய்யும் அவல நிலை மாறவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon