ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ராணுவ கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தின் உள்ளே இருந்தபடியே ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார். மாமல்லபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்தை சென்றடைந்தார். அங்கு 10வது ராணுவ கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
காலை வணக்கம் என்று தமிழில் பேசி ராணுவ கண்காட்சியில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
- தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது.
- உலகிற்கு அஹிம்சையை போதித்த நாடு நமது நாடாகும்.
- 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
- சோழர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
- சிறிய அளவில் தொடங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது.
- அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
- உலகுக்கு அகிம்சையை போதித்த நாடு நமது நாடு.
- போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது.
