Primary Menu

Top Menu

September 24, 18

ஜல்லிக்கட்டில் பவரும்..வெள்ளத்தில் அன்பும்…காட்டிய தமிழர்களுக்கு நன்றி

தமிழ்நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் வந்து நிற்போம் என்று கேரள வாலிபர் பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

பெரும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்துக்கு தமிழ்நாட்டில்  இருந்து நிவாரணத்தொகை உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர்,  அந்த வீடியோவில்,

“அரைகுறை தமிழில், பேசி, தமிழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.  தமிழ்நாட்டு ஆளுங்க என்று சொன்னாலே முன்னாடியெல்லாம், ஒரு மாதிரி பார்ப்பாங்க. கல்வியறிவு கம்மியானவர்கள் என்பதை போல நிறைய பேரு தப்பா நினைப்பார்கள். ஆனால், இப்பவும்கூட, பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து எங்களுக்காக வந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு நேரத்தில் நீங்கள் உங்கள் பவரை காட்டினீர்கள். இப்போது எங்களுக்காக உங்கள் அன்பை காட்டிவிட்டீர்கள். இதற்கு பின்னால் எந்த அமைப்புகள் இருந்தன என்பது எங்களுக்கு தெரியாது. அங்கேயுள்ளவர்கள் ஒரு ரூபாய் கொடுத்தாலும் கூட எங்கள் மனதில் அது இருக்கத்தான் செய்கிறது. இப்போது இங்கே வெள்ளம் வடிந்துவிட்டது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறார்கள். அந்த அளவுக்கு பிராப்ளம் இப்போ இல்லை. தமிழக ஆட்கள் செய்த அன்புக்கு ரொம்ப நன்றி. 2 நாள் மீட்பு முகாமில் இருந்த எனக்கே இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி உணர்ந்துள்ளார்கள். உண்மையிலேயே தமிழ்நாட்டில் என்ன பிரச்சினை என்றாலும் நாங்கள் எல்லோரும் வந்து நிற்போம். பாலக்காடு வழியாகத்தான் எல்லா பகுதிக்கும் லோடு போகிறது. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்தில் இருந்தும் லோடு போய்க்கொண்டுள்ளது. நாங்கள் எல்லோரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். நன்றி. ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon