Primary Menu

Top Menu

September 21, 18

கர்நாடகாவில் பாஜக வெற்றி : தமிழகத்துக்கு சாதகமா? பாதகமா?

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அமோகமாக வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழக்கில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு 6 வார கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.  ஆனால் கர்நாடகா தேர்தலுக்காக  6 வார காலத்துக்கு பின்னர் ஸ்கீம் என்றால் என்ன? என கேட்டது மத்திய பாஜக அரசு. அதனைத் தொடர்ந்து கூடுதல் கால அவகாசம் கேட்டது. இப்படியே கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் வரை காலங்கடத்தியது பாஜக.

பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் வெற்றி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

தவிடுபொடியாக்கிய பாஜக
கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும். எடியூரப்பா தலைமையிலான அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் காவிரி பிரச்சனை இனி இரண்டு மாநிலத்திற்கும் இடையில் இருக்காது. பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள். ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது. கர்நாடகாவில் ராகுல்காந்தியின் பரப்புரை எடுபடவில்லை. கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. பாஜகவிற்கு வாக்களித்த அனைத்து கன்னட மக்களுக்கும் நன்றி, என்று கூறியுள்ளார்.

தற்போது பாஜக எதிர்பார்த்தபடியே கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துவிட்டது.  இப்போது காவிரி பிரச்சனை என்னவாகும் என்பதில் பல கேள்விகள் எழுகின்றன.

  1. தமிழக பாஜக தலைவர்கள் கூறியது போல கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்துவிட்ட நிலையில் காவிரி நீர் வருமா?
  2. காவிரி நீரை திறந்துவிட்டாலும் தமிழகத்தில் போணியாகப் போவதில்லை என துரோகம் செய்யுமா ?
  3. அரியாசனம் தந்த கன்னடர்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கப் போகிறோம் என்கிற முடிவை எடுக்கப் போகிறதா பாஜக?
  4. என்ன நடந்தாலும் காவிரி நீரை திறந்துவிட்டு தமிழகத்திலும் கால் பதித்துவிடலாம் என முடிவெடுக்கப் போகிறதா பாஜக?
  5. மிகப் பெரிய வெற்றியை தந்த கர்நாடகாவுக்கு பாதகம் தரக் கூடிய வகையிலான ஒரு முடிவை பாஜக எடுக்குமா?
  6. கர்நாடகத்துக்கு பாதகம் தராத வகையில் அவசரம் அவசரமாக  காவிரி அமைப்பை ஒன்றை உருவாக்குமா?
  7.  காவிரி அமைப்பு ஒன்றை உருவாக்கினால் தமிழகத்துக்கான காவிரி நீர் முறையாக வருமா?
  8. திருவள்ளுவர் சிலையை திறந்து தமிழகத்துடன் நல்லுறவு பாராட்டிய எடியூரப்பா காவிரி நீரை திறந்துவிட்டு அதே போக்கை கடைபிடிப்பாரா? என ஏராளமான கேள்விகள் எழுகின்றன. 
Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon