Primary Menu

Top Menu

August 16, 18

தமிழ் மக்களே…நான் உங்களின் கலைஞர் பேசுகிறேன்…

என் உயிருனும் மேலான, தமிழ் மக்களே…

இதோ இந்த நிமிடத்திலிருந்து எனது நீண்ட நாள் ஓட்டத்தையும், போராட்டத்தையும் முடித்துக் கொள்கிறேன்.

எனது வாழ்வை சற்று திரும்பி பார்த்தால் எனக்கான கடமைகளையும், எனக்கான பணிகளையும் என்னால் முடிந்த வரை செய்து விட்டேன் என நினைக்கிறேன்

என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ……..

குடிப்பெருமையோ, குலப்பெருமையோ இல்லாத சமூகத்திலிருந்து வந்த சாமானியன் நான்

எனது பதின் வயதிலிருந்தே சமூக நீதிக்கான அரசியலை கையிலெடுத்தவன் நான்

பெரியாரின் கரங்கள் பற்றி, அண்ணாவின் தோள் சேர்ந்து தமிழுக்கான சுயமரியாதையை வளர்த்தவன் நான்

வெற்றி, தோல்வி, அவமானம், போராட்டம், துரோகம், வீழ்வது, எழுவது இப்படி தான் தொடர்ந்தது எனது வாழ்க்கை பயணம்

இயல், இசை, நாடகம், எழுத்து, இலக்கியம், கலை என எனது தமிழுக்கும் உயிராக உழைத்திருக்கிறேன்.

இந்திய துணைக் கண்டத்தில் மொழியாலும், சமூக நீதியிலும் நம் வளர்ச்சி தமிழகத்தை கட்டி எழுப்பியதில் எனது பங்கும் அளப்பரியது

தெற்கிலிருந்து உதித்த ஒரு சூரியனாய், வடக்கத்திய சீமான்களை எதிர்த்தும் சரி, அரவணைத்தும் சரி நமக்கான உரிமைகளை பெற்றிருக்கிறேன்.

ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், விளிம்பு நிலை மக்களுக்கு விடிவெள்ளியாகவும் இருந்திருக்கிறேன்.

தேர்தல் அரசியலிலும், ஓட்டரசியலிலும் என்னில் குறைகள் இருக்கலாம். சாதனைகளும் என்னில் உண்டு, விமர்சனங்களும் என்னில் உண்டு, ஆனாலும் எனது சமூக நீதிக்கான அரசியலை நீ மறுக்க முடியாது

மொழியுணர்வு, சமூக நீதி மற்றும் சுயமரியாதைக்கான போராட்ட குணங்கள், விடாமுயற்சி, வீழ்ந்து வீழ்ந்து எழுவது, தன்னம்பிக்கை, சாதுர்யம், மன்னிக்கும் பண்பாடு என ஒரு போராளிக்குரிய குணாதிசயங்கள் என்னில் ஆயிரமுண்டு. எனக்கு பிறகான காலங்களில் இந்த சமூகத்தை எடுத்துச் செல்ல, உனக்கான பாதையை வகுத்துக் கொள்ள, அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.. அதில் நீ துணிச்சலாக பயணிக்கலாம்…

எனது சமகால அரசியல் ஜாம்பவான்கள் யாரும் தற்போது நம்மில் இல்லை. இனி நானும் இல்லை..

இந்திய ஒன்றியத்தில், வடக்கத்தியர்கள் வியக்கும் வண்ணம் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூகநீதி, சமதர்மம், தொழிற்வளர்ச்சி, கட்டமைப்பு என அனைத்திலும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக நமது தமிழகத்தை முன்னெடுத்தி சென்றிருக்கிறோம்.

ஒரு தலைமுறை அரசியல் சகாப்தம் என்னோடு முடிந்து போயிற்று……

நாங்கள் வகுத்த பாதை, போராடிய களம் அப்படியே இருக்கிறது.. நீயும் அதை தொடர்ந்து வா… தலைமுறைகளாய் களமாடி வா…

நான் விடைபெறுகிறேன்… என் உயிருனும் மேலான, என் தமிழ் மக்களே …..

வாழ்வாங்கு வாழ்க என் தமிழும் என் தமிழ் மக்களும்

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

மதுரையும் சிறு தெய்வங்களும்

#மதுரை நகரம் ஒரு காலத்தில் பெரிய கிராமமாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon