Primary Menu

Top Menu

October 15, 18

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு

இன்று காலை அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட தல்லாகுளம் பெருமாள் கோவில் சார்ந்த தெப்பக்குளத்தை மேற்பார்வையிடும் பணியை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு மோகன்குமார் அவர்களும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் திரு.சந்திரன் அவர்களும் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களின் ஆய்வில் நீர்வரத்து கால்வாய் சரிசெய்யப்பட்டு இருந்தாலும் நீர் வெளியேறுவதற்கு வழியில்லை என்பதை அறிந்து, மதுரை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் அடைபட்டிருந்த அந்த வெளியேறும் நீர் வழிப்பாதையை சரிசெய்ய ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

நீர்வரத்துத சரிசெய்யப்பட்டதால் விரைவில் இந்த கண்மாய் நீர் நிரம்பிவிடும். மேலும் நீர் முழுதாக நிரம்பிவிட்டால் வெளியேறும் வகையில் வெளியேற்றும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதனால் விரைவில் தெப்பக்குளத்தில் திருவிழா சிறப்பாக நிகழ இருப்பதுடன் அப்பகுதி நிலத்தடி நீர் உயர்ந்து பொதுமக்களும் பயனடைவர்.

அப்துல் காலம் பிறந்தநாள் மோடி,மம்தா ட்விட்டரில் கருத்து?

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon