Primary Menu

Top Menu

June 24, 18

சிரியாவில் மக்களை காப்பாற்றும் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள்

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் வெள்ள நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து வரும் இவ்வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுக்கிறார்கள்.

ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பில் பெரும்பாலனவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மாணவர்கள் ஆவர். இந்த வீரர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட உயிர்களை சரிந்த கட்டிடங்களிலிருந்து மீட்கின்றனர்.இதுவரை போர் நடைபெறும் இடங்களிலிருந்து சுமார் 99,220 உயிர்களை காப்பாற்றியுள்ளனர் வைட் ஹெல்மெட் அமைப்பினர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த ஹீரோக்கள் ஏதோவித அபரிமிதமான நம்பிக்கையுடன் உலகின் ஆபத்தமான இடத்தில் அமைதியை நிலைநாட்ட ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிரிய போர் பகுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை சமூக வலைதளங்களில் The White Helmets பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply