Primary Menu

Top Menu

September 22, 18

ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 23ஆம் தேதி மின் இணைப்பை துண்டித்ததோடு, ஆலையின் முதல் அலகை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்ததால் கடந்த மார்ச் 27ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவும், மூடப்பட்ட முதல் அலகின் தற்போதைய மதிப்பு ரூ.2,100 கோடி எனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களுக்கு விளக்கம் கேட்டு மும்பை பங்குச்சந்தை, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்ச் 27 ல் இருந்து ஆலை இயக்கப்படவில்லை. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆலையின் மின்சாரம் நிறுத்தியும், முதல் உலையை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது மிகவும் சோகமான சம்பவம். ஆலையை மீண்டும் இயக்குவதற்காக உரிமம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon