Primary Menu

Top Menu

September 25, 18

கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமை !!!

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கை ஆற்றங்கரை மன்னர்களை வென்ற பிறகு அதன் நினைவாக தலாம் ராஜேந்திர சோழ மன்னன் நிர்மாணித்த நகரமே, கங்கை கொண்ட சோழபுரம். இக்கோவிலின் சிறப்பு அம்சம், பிரமாண்டமாக அமை ந்துள்ள நந்தி சிலை. இது தவிர, நடனமாடும் கணேசர் சிற்பம், சிங்கத் தலை வடிவில் அமைந்த கிணறு, சிவன் மற்றும் பார்வதி ஆகியேர், ராஜேந்திரனுக்கு முடிசூட்டுவது போன்ற சிற்பங்கள், அக்கால கட்டடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன.

சித்தன்னவாசல்

கிபி.. 2-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த ஜெயின் மத குடவரைக் கோவில். அஜந்தா குகை  கோவிலின் ஓவியங்களை பிரபதிபலிக்கும் வகையிலான பல ஓவியங்களை இங்கு காணலாம். விலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரைப் பூக்களை சேகரிக்கும் மக்கள் ஆகிய சிற்பங்கள் பாண்டியர் காலத்தைப் பிரதிபலிக்கின்றன. சித்தண்ணவாசல் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பல பண்டைய இடங்கள் மூழ்கிக் கிடப்பதாக தொல் பொருள் துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை அகழ்ந்தெடுத்தால் மேலும் பல அற்புதங்களை நாம் பெற முடியும்.

ஆவுடையார் கோவில்

94 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவுடையார் கோவில். பழம்பெறும் ஆத்மநாபசாமி கோவில் இங்கு உள்ளது. கோவிலின் மேற்கூரை, கிரானைட் கற்களால் வேயப்பட்டது. ஆளுயர சிலைகள் காண்பவர் மனதில் பக்தியைக் கூட்டும். கி.பி. 10-வது நூற்றாண்டின்போது இக்கோவில் கட்டப்பட்டது.

Comments

கீழடி அகழ்வாராய்ச்சி – பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்

சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon