Primary Menu

Top Menu

October 20, 18

மனிதனை காதலிக்கும் ராஜநாகம்!!

நிறையப் பேர் வைட் காலர் ஜாப்பிற்கே ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ரோமியலஸ் விடேகர் தமது வாழ்க்கையை காட்டின் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் நுகர்வதற்காக இயற்கையோடு தம்மை இணைத்துக் கொண்டார்.

யார் இவர் ? என்ற எனது தேடல் இவரைப் பற்றி ஆச்சர்ய விசயங்களை தந்தது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரோமியலஸ் விடேகர் , இயற்கை ஆர்வளர் மட்டுமல்ல, (conservationist) ஊர்வன நீர்வாழ் உயிரிகளை நேசிப்பவர் மட்டுமல்ல ( herpetologist )அவர் சினிமா தயாரிப்பாளர் (டாக்குமென்ரி) மட்டுமல்ல, சென்னையில் உள்ள பாம்பு பண்னையை நிறுவியவரும் ஆவார்.

மனித வாசனை படாத பழங்குடிகளின் பாதம் கூட படாத அமைதியான காட்டுப்பகுதி அமைதிப்பள்ளத்தாக்கு. இதனை உலகறியச் செய்தவர் ரோமியுலஸ் விடேகர்.
இந்திய துணைக்கண்டத்தில் அழியும் நிலையில் இருந்த பாம்பு இனங்கள் இந்த பண்ணையில் பராமரித்துப் பாதுகாக்கப் படுகிறது. கிண்டியில் இந்த பாம்பு பூங்கா 1972 ல் இவரால் ஆரம்பிக்கப் பட்டது. இது தான் இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப் பட்ட பாம்பு பூங்கா. வேர்ட்லைப் ஃபண்ட் ஒத்துழைப்புடன் இதை சாதித்தார். அதன் பிறகு (1976)ஆரம்பிக்கப்பட்டது தான் மாமல்லபுரம் சாலையில் உள்ள முதலை பண்ணை இதில் 15 வகைப்பாட்டியலில் வரும் 3000 முதலைகள் இருக்கின்றன. முக்கியமாக இதில் இருக்கும் 3 வகைகள் அழிவின் விளிம்பில் இருகின்றன என்று சொல்கிறார்கள்.

சிறியவயதில் இருந்து பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்.
அமெரிக்காவில் பிறந்த இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் அதற்கான இவரின் பயண எல்லை விரிந்த அளவிளானது.

க்ரோகடைல் ஹண்டர் ஸ்டீவன் இர்வின் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர் போல செயற்கையான த்ரில்கள் இவரின் டாக்குமென்ரிகளில் பார்க்கமுடியாது. இவருடைய கோப்ரா டாக்குமென்ரிகள் எதார்த்தமானது, செயற்கை கலப்பு இல்லாதது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைக்காடுகளில் ரிசர்ச் செண்டர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இவரது அவா.

இயற்கையையும்,காட்டுயிர்களை பற்றியும் இவரது அனுபவங்களை பேசுகிறது இவர் எழுதிய புத்தகங்கள்.

எழுபதுகளில், ரஷ்யன் பிலிம் நண்பருடன் சேர்ந்து “ரிக்கி டிக்கி தாவி” எனும் டாகுமென்ரியை எடுத்தார். அதில் பறவைகளின் முட்டைகளை திருடும் பாம்புதான் முக்கிய கதா பாத்திரம்.
ரோமியலஸ் சொல்கிறார் “ 1980 ல் நான் காட்டு வாழ்க்கையை பற்றிய படங்களை எடுத்த போது என்னிடம் டி.வி கிடையாது, இப்படி பட்ட படங்கள் அதிகம் இல்லை அப்போது. பாம்புகளுடனான எனது பரிசயம் மற்றும் அவைகள் பற்றிய விழிப்புணர்வு ஜனங்களுக்கு சென்று சேரவேண்டும் என்று விருப்பப் பட்டேன். பாம்பு பண்ணை ஆரம்பிக்கப் பட்ட பிறகு அவைகளை பற்றி வருடத்திற்கு மில்லியன் பேருக்கு தெரியப் படுத்தப் படுகிறது. ஆனால் அதுவே டி.வி மூலமாக ஒரே நேரத்தில் 20 மில்லியன் பேரை சென்றடைகிறது.”

பள்ளித்தோழர்கள் இருவருடன் சேர்ந்து எடுத்த டாக்குமென்ரி (Snake bite – 1985 ) பாம்பு கடியால் இறப்பவர்களை பற்றியது. இதற்கு 50000 ரூபாய் செலவானது. அரை மணிநேரம் ஓடும் இது பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு U.S ல் கோல்டன் ஈகிள் விருது கொடுக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது.

இந்த மாதிரியான படங்கள் எடுக்க செல்லும் காட்டுபகுதிகளில் மலைவாழ் மக்களோடு (ஆரவல்லி, பழனி மற்றும் இருளர்கள் )பழகிய அனுபங்கள் மறக்கமுடியாது என சொல்கிறார். அந்த பயணங்களின் போது கொடிய விசம் கொண்ட பாம்புகளிடம் இருந்து தப்பித்தேன். ஆனால் அதைவிட NH 47 ல் காரில் செல்வது பயமாய் இருக்கிறது.
இவரது பல டாக்குமென்ரிகளும், அனிமல் ப்ளானட், டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபிகளில் ஓடுகிறது.

விருதின் மூலம் தனக்கு கிடைத்த 30000 பவுண்டுகளை Agumbe Rainforest Research Station ஆரம்பிக்க செலவிட்டார். இங்கு முக்கியமாக ராஜ நாகங்களின் வாழ்வியலை பற்றிய ஆய்வகம் செய்யப் படுகிறது.

கிங் கோப்ரா (ராஜ நாகம்) நேசனல் ஜியாகிரபியில் எமி அவார்ட்(Emmy award) பெற்று தந்தது. இது சின்னத் திரையில் ஆஸ்கார் போன்றது.

“super sized ” முதலை படம் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப் பட்டது.

ராஜ நாகம் பற்றி சில தகவல்கள் :

சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடிய ஜீவன். வால் நுனி யில் நேராக தரைமேல் எழும்பி மனிதனை அச்சுறுத்தக் கூடிய வல்லமையும், உலகில் கொடும் விசம் கொண்ட உயிரினங்களில் ஒன்று. இருபது வருடங்கள் உயிர் வாழும்.

அடிப்படையில் மனிதர்களை கண்டால் ஒதுங்கி விடும் ஆனால் கட்டம் கட்டப் படும் போது நேருக்கு நேர் எதிர்த்து தாக்கக்க கூடியது.

இதன் சிறு துளி விசம் 20 மனிதர்களை கொல்லக் கூடியதும், யானையை கொல்லவும் போதுமானது.

மழை காடுகளும் காட்டு பகுதியோடு ஒட்டி மனிதர் வசிப்பிடங்களிலும் இதன் நடமாட்டம் இருக்கும்.

தென்கிழக்காசியா, தென் சீன பகுதிகளிலும் காணப் படும் ராஜ நாகம் இடத்திற்கு தகுந்தாற் போல் நிறங்களில் வேறு படுகிறது. விசமுடைய பாம்புகளையும் விழுங்கக் கூடியது. மரத்தின் மீதேறி பறவை முட்டைகளையும் ஸ்வாகா செய்யும்.

பெண் ராஜ நாகம் முட்டைகளை அடைகாக்க இழை தளைகளை கொண்டு கூடு கட்டும். ஆண் ராஜ நாகம் பெண் ராஜ நாகத்துடன் இணை சேர வில்லை யென்றால் அவைகளை விழுங்குவது ஏன் ?  என்பது இன்னும் புலப்படாத இரகசிய மாக இருக்கிறது.

முட்டைகள் எத்தனை ?

முட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon