IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கம்ப்யூட்டரில் மனைவியின் அந்தரங்க வீடியோக்களை பார்த்த கணவர் அதிர்ச்சி!

1

மனைவியின் அந்தரங்க வீடியோக்கள் கணவரின் கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்ததால் கணவர் அதிச்சி அடைந்துள்ளர். இது குறித்து போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.


கேரளா மாநிலம்  கோழிக்கோடு பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோழிக்கோடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போட்டோ மற்றும் வீடியோக்கள் கணவரின் கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்துள்ளது. அதை அந்த வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.


அவர் பார்த்த படங்கள் அவருடைய மனைவி ஆடை மாற்றுவது மேலும் படுக்கை அறையில் நடக்கும் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளது. இது குறித்து கணவர் மனைவிடம் கேட்ட போது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார். அந்த வாலிபர் உடனடியாக கேரளா சைபர் கிரைம்  போலீசாருக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டே புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண் வீட்டிற்கு சென்று கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் சோதனை செய்து பார்த்தனர். இந்த சோதனையில் இவை அனைத்தும் வாலிபரின் வீட்டில் இருந்தே அவருக்கு அனுப்பட்டுள்ளது.


மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கணவர்


மேலும் சோதனையில் பெண்ணின் படுக்கை அறையில் ஸ்மார்ட் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. அந்த ஸ்மார்ட் டி.வி மூலமாக தினமும் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் அந்த பெண் ஸ்கைப்பில் பேசி வந்துள்ளார். சைபர் கிரைம் வல்லுனர்கள் ஸ்மார்ட் டி.வி.யை சோதித்து பார்த்தனர். அதில் கேமரா ஆன்லைனில் இருந்தது தெரிந்தது. அந்த பெண் இரவில் கணவருடன் பேசி விட்டு டி.வி.யின் கேமராவை ஆப் செய்யாமல் இருந்திருக்கிறார்.  அது தொடர்ந்து கேமரா செயல்பாட்டில் இருந்து உள்ளது. இதை அறியாமல் ஸ்மார்ட் டி.வி. முன்பே அந்த பெண் உடை மாற்றுவது அனைத்தையும் செய்துள்ளார்.


இதனால் தான்  ஸ்மார்ட் டி.வி. கேமிராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் கணவரின் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் டவுண்லோடு ஆகி இருந்துள்ளது. இந்த காட்சிகளைதான் கணவர் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



இதனை கண்டு பிடித்த சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள், அந்த பெண்ணிடம் நடந்ததை எடுத்துக் கூறினர். மேலும் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினர்.

#smarttv #husband #wife #videos #skype