Primary Menu

Top Menu

September 25, 18

சிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்??

இது ஒரு சிங்கப்பூர் விரைவுச்சாலை… அதன் இரு புறமும் காடு! குரங்கு, பாம்பு போன்ற சொற்ப எண்ணிக்கையிலான வன விலங்குகள் அங்கு வசிக்கின்றன!

அவை அந்த விரைவுச்சாலையை கடந்து இந்தப்பக்கம் வரமுடியாத நிலை! அந்த விலங்குகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக, இரண்டு காட்டுப்பகுதிகளையும் இணைத்து ஒரு பாலத்தை கட்டியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.

இனி அவை சுதந்திரமாக அங்கும் இங்கும் திரியலாம். இந்தப் பாலத்துக்கு போக, மனிதர்களுக்கு அனுமதி இல்லை. எளிதில் போகவும் முடியாது.

இதைப் பார்க்கும்போது எனக்கு நம் ஊர் ஞாபகம் வந்தது. எத்தனை சம்பவங்கள்… சாலையை கடக்க முயன்ற யானை, குரங்கு போன்ற விலங்குகள் ரயில் வண்டிகளிலும், இதர வாகனங்களிலும் அடிபட்டு இறக்கின்றன.

பசுமைச்சாலை என்னும் பெயரில் லட்சக்கணக்கான இயற்கை வளங்களை அழிக்க துடிக்கும் நம் தமிழக அரசை என்ன சொல்ல…..??

சிங்கப்பூரில் அவ்வளவாக வன விலங்குகள் கிடையாது. அவற்றுக்கே அவர்கள் இத்தகைய வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். இதைப்போன்ற Eco-link bridges சிங்கப்பூரில் மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளிலும் இருக்கிறது.

காடுகளும், மலைகளும் ஒரு நாட்டின் சொத்து. அவற்றில் வாழும் நுண்ணுயிரிகள் முதற்கொண்டு, யானை வரை எல்லாம் பொக்கிஷங்கள்!

ஆனால் மனிதர்களையே சுட்டுக்கொல்லும் நம் நாட்டில், மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்??

Image result for Eco-link bridges

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon