Primary Menu

Top Menu

September 22, 18

வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் சிம்பு படத்தின் நாயகி இவரா??

நடிகர் சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் சிம்புவுககு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வளர்ந்து வரும் நடிகை. ஆனால், இவர் ந டிக்க வந்த தொடக்கத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்து தெலுங்கில் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் மீண்டும் சாவித்ரிகேரக்டரில் நடிக்கவுள்ளார்.

நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon